அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) NAGAI(DT) தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளத்திற்கு வருகை தரும் தாங்கள் அனைவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக! அன்பிற்கினிய சகோதர,சகோதரிகளே நீங்கள் வருகை தந்த NAGAI(DT) தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த இணையதளமானது அல்லாஹ்வின் மாபெரும் கருனையினால் அனைவர்களுக்கும் இஸ்லாத்தின் தூயகொள்கைகளையும், சகோதர வாஞ்சைகளையும் வலிமையோடு எடுத்தியம்பும் ஒரு மாபெரும் வழியாக இதை நாம் கருதி, மிக குறுகிய காலத்தில் வடிவமைத்து இருக்கின்றோம். இதில் அவ்வப்போது ஜமாஅத் மூலமாக நடந்த நிகழ்வுகளை தந்து வருகிறோம். இதை இன்னும் பல பயனுள்ள வகையில் செய்திகளை தந்து, நமதூர் மக்கள் அனைவர்களும் தூய்மையான மார்க்க நெறி முறைகளை அறிந்து அதன் மூலமாக பலரிடமும் மட்டியிட்டுக்கிடக்கும் மூட பலவழக்கங்களும், சடங்கு, சம்பிரதாயங்களும் இன்னும் என்னென்ன இஸ்லாம் கூறாத செயல் எல்லாம் குடி கொண்டு நம்முடைய ஈமானை சல்லடையாக அரித்தெடுத்துக் கொண்டுள்ளதோ அவைகளை எல்லாம் இன்ஷா அல்லாஹ் வேரோடும், வேரடி மண்டோடும் பரித்தெடுத்து நம் சமுதாய மக்களை சொர்க்கத்திற்கு உரியவர்களாக உரு மாற்ற வேண்டும் என்பதே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுதி மிக்க நோக்கம். NAGAI(DT) தவ்ஹீத் ஜமாஅத்தின் நோக்கமும் அதுவே!.. குறிப்பாக நமதூர் மக்களுக்கு இஸ்லாத்தின் தூய்மையான செய்திகளை கொண்டுச்சேர்ப்பதினால் இதுவரை வந்த,இனி வருகின்ற,இன்னும் வர இருக்கின்ற அணைத்து விதமான இடற்பாடுகளையும்,தொல்லைகளையும், அல்லாஹ்விற்காக அணைத்தையும் பொறுத்து எங்களுடைய தவ்ஹீத் பணி சிறக்க வல்ல அல்லாஹு ரப்பில் ஆலமீன் அருள் புரிவானாக! தாங்களும் அல்லாஹ்விடம் துஆச்செய்வதோடு வெகு விரைவாக NAGAI(DT) தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த இணையதளத்தின் மார்க்க விளக்கம் அறியும் செய்திகளை விரிவாக்கம் செய்கின்ற பணி நடந்து வருகிறது இன்ஷா அல்லாஹ் விரைவில் இப்பணி நிறைவடைந்து அதிகதிகமான இஸ்லாம் பற்றிய அணைத்து செய்திகளும் மற்றும், சமுதாய செய்திகள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செய்திகள், ஊர் செய்திகள், முழு தமிழ் நாட்டின் செய்திகள், நமது நாட்டின் செய்திகள், உலக செய்திகள், இன்னும் பல தகவலோடு NAGAI(DT)தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளம் வர இருப்பதை மகிழ்ச்சியோடு கூறிக்கொண்டு ”நன்மையை ஏவி, தீமையை தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்கவேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.(அல் குர்ஆன் 3:104) என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறு வதை நாம் ஒவ்வொருவர்களும் தமது வாழ்வில் கடைப்பிடித்து வெற்றிபெற தத்தமது காலத்தை கனியவைப்போமாக! இன்ஷா அல்லாஹ் விரைவில் பற்பல தகவலோடு NAGAI(DT) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளம் வரயிருப்பதை கூறிக்கொண்டு விடைப்பெறுகிறோம். அன்புடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - NAGAI(DT)

சனி, 4 ஜூன், 2011

பூமியின் நீர்


             பூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே!!!
                                                                                                                                      "நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் - நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது" (அல் குஆன் 39:21)

"மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம், நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்" (அல் குஆன் 23:18)

நாம் பள்ளிப்பாட புத்தகங்களில் நீரின் சுழற்சி (principle of Water cycle) என்பதைப் பற்றி படித்திருக்கின்றோம். ஆறுகள் மற்றும் கடல்களிலிருந்து நீர் ஆவியாகி, பின்னர் அந்த ஆவிகள் மேகங்களாக மாறி அந்த மேகங்கள் குளிர்ந்து மழையாக பெய்கின்றது என்றும், அந்த மழை நீரே பூமிக்குள் ஊடுருவிச் சென்று நீர் ஊற்றுக்களாக ஓடுகின்றது என்றும், பூமியின் மேற்பரப்பிலுள்ள நீர் ஆறுகள் வழியாக கடலை அடைகிறது என்றும், பின்னர் மீண்டும் ஆவியாகி, மேகங்களாகி மழை பெய்கின்றது என்றும் படித்திருக்கின்றோம். இந்த வகையான நீரின் சுழற்சிக்கு ஆங்கிலத்தில் water cycle என்று பெயர்.

இதைப் பற்றி "The Bible, The Qura'n and Science" என்ற உலகப்புகழ் பெற்ற ஆய்வு நூலை (தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் விஞ்ஞான ஒளியில் பைபிளும், குஆனும்) எழுதிய டாக்டர். மாரிஸ் புகைல் (Dr. Maurice Bucaille) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியல் மேதை, The qura'n and Modern Science (குர்ஆனும் நவீன விஞ்ஞானமும்) என்ற தமது நூலில் பின்வருமாறு கூறுகிறார்:-

Water cycle என்பது இன்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. குர்ஆனில் கூறப்படுகின்ற water cycle பற்றிய வசனங்கள் இன்று நம்மிடையே உள்ள நவீன அறிவியலை ஒத்திருக்கின்றது. நாம் குர்ஆன் இறக்கி அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களிடையே இருந்து வந்த நம்பிக்கைகளைப் பார்ப்போமேயானால், வெறும் மூட நம்பிக்கைகளையும், தத்துவங்களையுமே நீரியல் பற்றிய உண்மை என்று நம்பி வந்தனர். உதாரணமாக பின்வரும் குர்ஆன் வசனத்தை ஆராய்வோம்.

நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான் (அல் குஆன் 39:21)

இந்த வசனத்திலுள்ள அறிவியல் உண்மைகள் இன்று நமக்கு சாதாரணமாக தெரிகிறது என்றாலும் இந்த உண்மைகள் நீண்ட நாட்களாக குறிப்பாக குர்ஆன் இறக்கியருளப்பட்ட காலத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை நாம் மறுக்க முடியாது. இந்த water cycle கோட்பாட்டை Bernard Palissy என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் தான் முதன்முறையாக கண்டுபிடித்தார். 16 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள், பிளேட்டோ என்ற தத்துவ வாதியின் கருத்துக்களான கடல் நீர் காற்றின் அழுத்தத்தினால் பூமியினுள் ஊடுருவிச் சென்று பின்னர் ஊற்றுக்களாக மாறுகிறது என்று நம்பி வந்தனர்.

17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த Descartes போன்ற சிறந்த சிந்தனையாளாகள் கூட மேற்கூறிய சித்தாந்தத்தையே உண்மை என நம்பி வந்தனர்.

19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த மக்கள் கூட தத்துவ மேதை என போற்றப்படுகின்ற அஸ்டாட்டிலின் கோட்பாடான மலைக்குகைகளில் பெரும் பனிக்கட்டிகள் குளிர்ந்து நீராகி, அவை பெரிய ஏரிகளாக மாறி அவைகளே பூமிக்கடியில் உள்ள ஊற்றுக்களில் நீர் ஓடுவதற்குரிய ஆதாரமாக இருக்கிறது என்று நம்பி வந்தனர்.

ஆனால் இன்றுள்ள அறிவியல் வளர்ச்சியோ, வானிலிருந்து பெய்த மழை நீரே பூமிக்குள் ஊடுருவிச் சென்று அவைகள் நீர் ஊற்றுக்களாக ஓடுகின்றது என்பதைக் கூறுகின்றது. இன்றைய காலக்கட்டத்தில் கண்டுபடிக்கப்பட்ட இந்த நவீன அறிவியல் கருத்தை குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவிட்டது என டாக்டா மாஸ் புகைல் கூறினார்.

இதுபோல் இன்னும் பல திருமறையின் வசனங்களை ஆய்வு செய்த டாக்டா மாரிஸ் புகைல், தமது நூலின் இறுதியில் பின்வருமாறு கூறுகிறார். "நாம் எடுத்து விளக்கிய அறிவியல் உண்மைகளிலிருந்து, மனித முயற்சிகளுக்கு சவாலாக இருந்துக் கொண்டிருக்கும் இந்த குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது என்ற முடிவைத் தவிர வேறெதுவுக்கும் நம்மால் வரமுடியவில்லை".

"நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது" (அல் குஆன் 39:21)

அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களுடைய படைப்புகளை இணைதளத்திள் பதிவு செய்ய nagaisouthtntnet@gmail.com இந்த முகவரிக்கு அனுப்பவும்.