அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) NAGAI(DT) தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளத்திற்கு வருகை தரும் தாங்கள் அனைவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக! அன்பிற்கினிய சகோதர,சகோதரிகளே நீங்கள் வருகை தந்த NAGAI(DT) தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த இணையதளமானது அல்லாஹ்வின் மாபெரும் கருனையினால் அனைவர்களுக்கும் இஸ்லாத்தின் தூயகொள்கைகளையும், சகோதர வாஞ்சைகளையும் வலிமையோடு எடுத்தியம்பும் ஒரு மாபெரும் வழியாக இதை நாம் கருதி, மிக குறுகிய காலத்தில் வடிவமைத்து இருக்கின்றோம். இதில் அவ்வப்போது ஜமாஅத் மூலமாக நடந்த நிகழ்வுகளை தந்து வருகிறோம். இதை இன்னும் பல பயனுள்ள வகையில் செய்திகளை தந்து, நமதூர் மக்கள் அனைவர்களும் தூய்மையான மார்க்க நெறி முறைகளை அறிந்து அதன் மூலமாக பலரிடமும் மட்டியிட்டுக்கிடக்கும் மூட பலவழக்கங்களும், சடங்கு, சம்பிரதாயங்களும் இன்னும் என்னென்ன இஸ்லாம் கூறாத செயல் எல்லாம் குடி கொண்டு நம்முடைய ஈமானை சல்லடையாக அரித்தெடுத்துக் கொண்டுள்ளதோ அவைகளை எல்லாம் இன்ஷா அல்லாஹ் வேரோடும், வேரடி மண்டோடும் பரித்தெடுத்து நம் சமுதாய மக்களை சொர்க்கத்திற்கு உரியவர்களாக உரு மாற்ற வேண்டும் என்பதே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுதி மிக்க நோக்கம். NAGAI(DT) தவ்ஹீத் ஜமாஅத்தின் நோக்கமும் அதுவே!.. குறிப்பாக நமதூர் மக்களுக்கு இஸ்லாத்தின் தூய்மையான செய்திகளை கொண்டுச்சேர்ப்பதினால் இதுவரை வந்த,இனி வருகின்ற,இன்னும் வர இருக்கின்ற அணைத்து விதமான இடற்பாடுகளையும்,தொல்லைகளையும், அல்லாஹ்விற்காக அணைத்தையும் பொறுத்து எங்களுடைய தவ்ஹீத் பணி சிறக்க வல்ல அல்லாஹு ரப்பில் ஆலமீன் அருள் புரிவானாக! தாங்களும் அல்லாஹ்விடம் துஆச்செய்வதோடு வெகு விரைவாக NAGAI(DT) தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த இணையதளத்தின் மார்க்க விளக்கம் அறியும் செய்திகளை விரிவாக்கம் செய்கின்ற பணி நடந்து வருகிறது இன்ஷா அல்லாஹ் விரைவில் இப்பணி நிறைவடைந்து அதிகதிகமான இஸ்லாம் பற்றிய அணைத்து செய்திகளும் மற்றும், சமுதாய செய்திகள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செய்திகள், ஊர் செய்திகள், முழு தமிழ் நாட்டின் செய்திகள், நமது நாட்டின் செய்திகள், உலக செய்திகள், இன்னும் பல தகவலோடு NAGAI(DT)தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளம் வர இருப்பதை மகிழ்ச்சியோடு கூறிக்கொண்டு ”நன்மையை ஏவி, தீமையை தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்கவேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.(அல் குர்ஆன் 3:104) என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறு வதை நாம் ஒவ்வொருவர்களும் தமது வாழ்வில் கடைப்பிடித்து வெற்றிபெற தத்தமது காலத்தை கனியவைப்போமாக! இன்ஷா அல்லாஹ் விரைவில் பற்பல தகவலோடு NAGAI(DT) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளம் வரயிருப்பதை கூறிக்கொண்டு விடைப்பெறுகிறோம். அன்புடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - NAGAI(DT)

சனி, 4 ஜூன், 2011

விஞ்ஞானம்

     விஞ்ஞான சகாப்தத்தில் உங்கள் சிந்தனைக்கோர் ஒப்பற்ற விருந்து
                                                                                                                                                                                       அளவற்ற அருளாளனின் திருநாமம் போற்றி.


01: பெருவெடிப்புக் கொள்கை (Big Bang Theory):
கிட்டத்தட்ட 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் புகை மண்டலமாக ஒன்றாக இனைந்து இருந்தவைகள், Big Bang எனப்படும் ஒரு பெருவெடிப்பு மூலமாக தனித்தனியே வெவ்வேறாகப் பிரிந்தன என மேற்கத்திய விஞ்ஞானிகள் 1973 ம் ஆண்டு நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

இந்த உண்மை உணர்த்தப்படுமுன்னர் உலகின் உருவாக்கம் பற்றி பற்பல கற்பனைக் கதைகளைத் தான் முன்னைய நூற்கள் புனைந்தன. ஆனால் அல்-குர்ஆனோ 1400 வருடங்களாக இந்த 'பெருவெடிப்புக் கொள்கை" எனப்படும் நிகழ்வின் மூலமாக ஏற்பட்ட உலக உருவாக்கம் பற்றி ஒரு மாபெரும் விஞ்ஞானி கூறினால் எவ்வாறு இருக்குமோ அதை விடத் துள்ளியமாகக் கூறியிருப்பதை நாம் பார்க்க முடிகின்றது!

இச்செய்தியை அல்-குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

قال تعالى:[أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقاً ففتقناهما]- الأنبياء/ 30

'வானங்களும், பூமியும் இனைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தமைத்தோம் என்பதையும்..(நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா?" - (21:30)

பாலைவனம் தாண்டிச் செல்லா பல்லவிக் காலத்தில் இம்மாபெரும் வானவியற் கூற்றினை முஹம்மது நபி (ஸல்) அவர்களால் எவ்வாறு கூற முடிந்தது!

ஆக, அல்-குர்ஆன் இறைவேதம் என்பதற்கு இதைவிட வேறு சான்றே தேவையில்லை.


02: நாளுக்கு நாள் விரிவடையும் அண்ட வெளி (Expanding Universe):

Expanding Universe நிகழ்ந்த பின் கோடிக்கணக்கன நட்சத்திர மண்டலங்கள் சிதறி ஒவ்வொன்றும் குறிப்பிட்ட வேகத்தில் சென்று கொண்டிருப்பதால் இப்பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே செல்கின்றது என Adamic Arow எனும் விஞ்ஞானியே முதலில் இது பற்றிக் கூறுகிறார்.

இப்பிரபஞ்சம் சுமார் 100 பில்லியன் ஆண்டுகள் வரை விரிவடைந்து கொண்டே செல்லும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பூமிக்கு மிக அருகில் உள்ள Proxima Centauri நட்சத்திரம் 25 பில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ளது. இன்னும் பல நட்சத்திரங்களின் ஒளி பூமியை வந்து சேரவே இல்லை. இப்பிரபஞ்சம் பரந்து விரிந்து கொண்டே செல்கின்றது.
ஆதாரம்: The World Book Encyclopedia, NASA, Ames Research Center, California, USA.

இதனை அல்-குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:
قال تعالى:[والسماء بنيناها بأيد وإنا لموسعونٍ] - الذاريات/ 47

'வானத்தை வலிமை மிக்கதாகப் படைத்தோம். நிச்சயமாக விரிவாற்றல் உடைய(Expanding Universe)வராவோம்." -(51:47)
அடுத்த தொடரில். கோள்களின் இயக்க விதி பற்றிப் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ!    

விஞ்ஞான சகாப்தத்தில் உங்கள் சிந்தனைக்கோர் ஒப்பற்ற விருந்து

அளவற்ற அருளாளனின் திருநாமம் போற்றி.

03: கோள்களின் இயக்க விதி:

1571 ம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்த Johannes Kepler என்ற விஞ்ஞானியே "The Laws of Planetary" எனும் வான்கோள்களின் இயக்க விதிகளை 1609 ல் கண்டுபிடித்தார். இதை தனது 'நோமியா நோவியா" எனும் புத்தகத்தில் விவரிக்கின்றார்.

இது இவரது மாபெரும் சாதனை என்பதில் சந்தேகம் கிடையாது. இவர் இச்சாதனையை உலகின் கண்னெதிரே கொண்டு வருவதற்கு எவ்வளவோ உழைத்திருக்க வேண்டும். எத்தனையோ நவீன தொலை நோக்கு சாதனங்களை உபயோகப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு கிட்டத்தட்ட 1400 வருடங்களுக்கு முன்னர் இவ்வுலகில் உதயமான அல்-குர்ஆனில் 'கோள்களின் இயக்க விதி" பற்றி பல இடங்களில் கூறப்பட்டுள்ளது சிந்தித்து சத்தியத்தைத் தேடும் உள்ளங்களுக்கு ஒரு விருந்தாகும்.

அல்-குர்ஆன் இறைவாக்காகும் என்பதனை நிரூபிக்கும் வசனங்களில் இதுவும் ஒன்றாகும்:

قال الله تعالى:[وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون]- 21:33
'அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். (அவை) ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன." –(21:33) மேலும் (36:38,40) போன்ற வசனங்களிலும் காணலாம்.

அரேபியர்களின் வானவியல் தேர்ச்சியை வைத்து, இது போன்ற வசனங்கள் அரபுகளால் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு போதிக்கப்பட்டு பின் அல்-குர்ஆனில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்ற ஒரு வாதத்தை வைக்கலாம். ஆனால் அல்-குர்ஆன் இறங்கி கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் தான் அரபுகள் வானவியலில் தேர்ச்சி பெற்றார்கள் என்பதனை கவணத்தில் கொண்டால், அல்-குர்ஆன்தான் அரபுகளுக்கு பாடம் நடத்தியிருக்க வேண்டும் என்பதனை இலகுவில் புறிந்து கொள்ள முடியும்!

04 – அனைத்துக் கோள்களும் ஒரு தவணை வரைதான் ஓடுகின்றன.

பூமி, சூரியன், சந்திரம் மற்றும் பிற கிரகங்கள், நட்சத்திரங்களை உள்ளடக்கிய (Milkyway Galaxy) பால் வீதி மண்டலத்தில் இது போன்ற இன்னும் 200 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளதாக விஞ்ஞான ஆய்வகம் கூறுகின்றது. இந்த பால் வீதி காலக்ஸியானது வினாடிக்கு 500 கி.மீ வேகத்தில் பயணமாகிக் கொண்டிருக்கின்றது. இப்படி ஒவ்வொரு காலக்ஸிகளும் தான் சுழழும் திசைக்கு எதிர்த் திசையில் 27 டிகிரி நிலையில் சென்று கொண்டிருக்கின்றன.

அவையனைத்தும் 'Great Attracter' என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக 1986 ல் கண்டுபிடித்துள்ளனர். இது பூமியிலிருந்து 200 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ளதாகக் கணக்கிட்டுள்ளனர். (ஒளி, ஒரு வினாடிக்கு 186282 மைல்கள் வேகத்தில் ஒரு ஆண்டு முழுவதும் பயணம் செய்யும் தூரம் ஒரு ஒளியாண்டு தூரமாகும்.)
-(ஆதாரம்: The world book encyclopedia, NASA, Ames Research Center, California. USA.)

எல்லாக் கோள்களும் குறிப்பிட்ட ஒரு தவணை வரை ஓடுகின்றன என்ற செய்தியை அல்-குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது:
قال الله تعالى:[وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى] – 13:2
'அவனே சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன". (13:2)

சூரியன் மட்டுமல்ல அனைத்து கோள்களும் ஒரு தவணை வரைதான் ஓடுகின்றன என்பதனை 31:29, 35:13, 39:5 ஆகிய வசனங்களும் தெளிவாகக் கூறி அல்-குர்ஆன் இறைவாக்கு என்பதனை தொடர்ந்தும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது.
அடுத்த தொடரில். இன்ஷா அல்லாஹ் ..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களுடைய படைப்புகளை இணைதளத்திள் பதிவு செய்ய nagaisouthtntnet@gmail.com இந்த முகவரிக்கு அனுப்பவும்.