அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) NAGAI(DT) தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளத்திற்கு வருகை தரும் தாங்கள் அனைவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக! அன்பிற்கினிய சகோதர,சகோதரிகளே நீங்கள் வருகை தந்த NAGAI(DT) தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த இணையதளமானது அல்லாஹ்வின் மாபெரும் கருனையினால் அனைவர்களுக்கும் இஸ்லாத்தின் தூயகொள்கைகளையும், சகோதர வாஞ்சைகளையும் வலிமையோடு எடுத்தியம்பும் ஒரு மாபெரும் வழியாக இதை நாம் கருதி, மிக குறுகிய காலத்தில் வடிவமைத்து இருக்கின்றோம். இதில் அவ்வப்போது ஜமாஅத் மூலமாக நடந்த நிகழ்வுகளை தந்து வருகிறோம். இதை இன்னும் பல பயனுள்ள வகையில் செய்திகளை தந்து, நமதூர் மக்கள் அனைவர்களும் தூய்மையான மார்க்க நெறி முறைகளை அறிந்து அதன் மூலமாக பலரிடமும் மட்டியிட்டுக்கிடக்கும் மூட பலவழக்கங்களும், சடங்கு, சம்பிரதாயங்களும் இன்னும் என்னென்ன இஸ்லாம் கூறாத செயல் எல்லாம் குடி கொண்டு நம்முடைய ஈமானை சல்லடையாக அரித்தெடுத்துக் கொண்டுள்ளதோ அவைகளை எல்லாம் இன்ஷா அல்லாஹ் வேரோடும், வேரடி மண்டோடும் பரித்தெடுத்து நம் சமுதாய மக்களை சொர்க்கத்திற்கு உரியவர்களாக உரு மாற்ற வேண்டும் என்பதே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுதி மிக்க நோக்கம். NAGAI(DT) தவ்ஹீத் ஜமாஅத்தின் நோக்கமும் அதுவே!.. குறிப்பாக நமதூர் மக்களுக்கு இஸ்லாத்தின் தூய்மையான செய்திகளை கொண்டுச்சேர்ப்பதினால் இதுவரை வந்த,இனி வருகின்ற,இன்னும் வர இருக்கின்ற அணைத்து விதமான இடற்பாடுகளையும்,தொல்லைகளையும், அல்லாஹ்விற்காக அணைத்தையும் பொறுத்து எங்களுடைய தவ்ஹீத் பணி சிறக்க வல்ல அல்லாஹு ரப்பில் ஆலமீன் அருள் புரிவானாக! தாங்களும் அல்லாஹ்விடம் துஆச்செய்வதோடு வெகு விரைவாக NAGAI(DT) தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த இணையதளத்தின் மார்க்க விளக்கம் அறியும் செய்திகளை விரிவாக்கம் செய்கின்ற பணி நடந்து வருகிறது இன்ஷா அல்லாஹ் விரைவில் இப்பணி நிறைவடைந்து அதிகதிகமான இஸ்லாம் பற்றிய அணைத்து செய்திகளும் மற்றும், சமுதாய செய்திகள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செய்திகள், ஊர் செய்திகள், முழு தமிழ் நாட்டின் செய்திகள், நமது நாட்டின் செய்திகள், உலக செய்திகள், இன்னும் பல தகவலோடு NAGAI(DT)தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளம் வர இருப்பதை மகிழ்ச்சியோடு கூறிக்கொண்டு ”நன்மையை ஏவி, தீமையை தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்கவேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.(அல் குர்ஆன் 3:104) என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறு வதை நாம் ஒவ்வொருவர்களும் தமது வாழ்வில் கடைப்பிடித்து வெற்றிபெற தத்தமது காலத்தை கனியவைப்போமாக! இன்ஷா அல்லாஹ் விரைவில் பற்பல தகவலோடு NAGAI(DT) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளம் வரயிருப்பதை கூறிக்கொண்டு விடைப்பெறுகிறோம். அன்புடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - NAGAI(DT)

வியாழன், 9 ஜூன், 2011

சமுதாய செய்தி


நாகை (தெற்கு)மாவட்ட தர்பியா கீவலூரில் 10-07-2011அன்று நடைப்பெற்றது.  





ASSALAMU ALLIKUM.,.,
                                          MAY 8.,., "MARKA VILLKA POTHU KUTTAM" KILVELUR ILL NADAIPATRATHU.,.,.,"" ALTHAFI""  SIRAPU UARRI ATTRINAR.,.,.,

                                                                                                                                                                             
துளசியாபட்டினம் ஜும்மா உரை ; முஹம்மது அலி தலைப்பு;கொள்கையில் உறுதி..                                                                                 
உரை :திட்டசெரி சாதிக் தலைப்பு;விமர்சனம்

மமக ஆக்கிரமிப்புக்கு மரண அடி
        
கடந்த 14 ஆண்டுகளாக உணர்வு வார இதழ் எண் : 7, வடமரைக்காயர் தெருவில் செயல்பட்டு வந்தது. 2004ஆம் ஆண்டு உணர்வு அலுவலகத்தில் தமுமுகவினர் வன்முறை வெறியாட்டத்தில் இறங்கிய பின்பும் அது உணர்வு அலுவலகமாகவே இருந்து வந்தது.

ஆனால், கடந்த மே29அம் தேதி அன்று உணர்வு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த மமகவினர் இது மமக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என்று கூறி அராஜகத்தில் இறங்கினர்.

நாங்கள் ஆளும்கூட்டணியில் இருக்கின்றோம். எங்களை யாரும் அசைக்க முடியாது என்று இறுமாப்புடன் எம்.எல்.ஏ அலுவலகம் என்று சட்ட விரோதமாக அறிவித்துக் கொண்டனர். இதன் பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ததுடன் நடவடிக்கை மந்தமாக இருந்ததால் சட்டமன்ற முற்றுகை போராட்டம் உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களை அறிவித்தது.

இதன் பின்னர் விழித்துக் கொண்ட காவல்துறை உயர்அதிகாரிகள் மமக வின் ஹைதர் அலி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்து அரைமணி நேரத்தில் உணர்வு அலுவலக சாவியை கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும்; இல்லாவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்தனர்.

ஆளும் கூட்டணி என்பது வெத்துவேட்டு என்பதை காவல்துறையினர் தெளிவாகவே புரியவைத்து அதிரடியாக சாவியைக் கைப்பற்றி எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு மூடுவிழா நடத்திவிட்டனர்.

இதன் மூலம் தமுமுகவின் ஆக்கிரமிப்பு அராஜகத்திற்கு மூடுவிழா நடத்தப்பட்டது. ஆனாலும் சாவியை தவ்ஹீத் ஜமாஅத்தினரிடம் ஒப்படைப்பதாக இருந்தால் ஆர்.டி.ஓ மூலமாகத்தான் ஒப்படைக்க முடியும் என்று தெரிவித்த காவல்துறை அவ்வாறே ஆர்.டி.ஓ விடம் சாவியை ஒப்படைத்து விட்டது.

ஆர்.டி.ஓ விசாரித்து தவ்ஹீத் ஜமாஅத்திடம் சாவியை ஒப்படைக்க இருந்த நேரத்தில் பதறிப்போன மமகவினர் ஆர்.டி.ஓ விசாரணைக்கு எதிராக நீதிமன்றத்தில் இடைக்காலத்தடையை வாங்கிவிட்டனர்.

அதிகாரிகளை கைக்குள் போட்டு ஆளும்கூட்டணி என்று எதையும் சாதிக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு எதிராக இடைக்காலத்தடை பெற்றுள்ளனர். இந்த இடைக்காலத்தடையை சட்டப்படி விரைவில் முறியடிக்க தக்க முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

ஆர்ப்பாட்டம்

    தமுமுகவினரின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், அவர்களின் அராஜக ரவுடியிசத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும், மமகவின் கட்டப்பஞ்சாயத்துக்கும், முஸ்லிம்கள் சொத்தை சூறையாடுவதை இரும்புக்கரம் கொண்டு அரசாங்கம் ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், சென்னை மெமோரியல் ஹால் – அருகில் மாபெரும் கண்டனப்போர் ஜூன் 28ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 11மணிக்கு நடைபெற்றது..அல்ஹம்துலில்லா..


குறிப்பு :உணர்வு அலுவலக ஆக்கிரமிப்பு அகற்றியதற்கு ஆதாரமாக காவல்துறை வழங்கிய கடிதம் இணைக்கப்பட்டுள்ளது .






 ரமளானை வரவேற்போம்
மகத்துவமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்..... 'இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்து காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும'. (அல்குர்ஆன் 2:185)

மனித குல மாணிக்கம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'யார் நம்பிக்கைக் கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ, அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்'. (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி 37)

ரமளான் மகத்தான அல்லாஹ்வின் அருட்கொடை. மனித இனம் தனது குற்றங்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, தன்னைப் படைத்த இரட்சகனின் திருப்பொருத்தத்தின் நெருக்கத்தை இலகுவாகப் பெற்றுத்தரும் இனிய தினங்கள் நிறைந்ததே ரமளான்.

இஸ்லாத்தின் பெயரால் பிரிவுகளும், மாறுபட்ட சிந்தனைகளும் தோற்றுவிக்கும் குழப்பங்களிலிருந்து மனித குலம் நீங்கிட அல்லாஹ்வின் ஒருவழியை மட்டும் தெளிவுப்படுத்தும் பேரொளிமிக்க திருக்குர்ஆன் இறக்கி யருளப்பட்ட மாதம் ரமளான்.

உள்ளும் புறமும் எந்தவொரு அடையாளத்தைக் கொண்டும், நம்மால் இனங்காண முடியாமல் உணர்வுகளாலேயே இறைக்கருணையின் பக்கம் அடியார்களை இழுத்துச் செல்லும் அற்புத வணக்கமே நோன்பு.

அது பிற நாட்களில் நோற்பதை விட குறிப்பிட்ட இம்மாதத்தில் நோற்பது இறைமார்க்கத்தை நிலை நிறுத்தும் கடமையும் ஏக இறைவனுக்குப் பிரியமான அம்சமும் ஆகும்.

இறையச்சம் இல்லாத அமல்கள் எதற்கும் பயனளிக்காத விழலுக்கு நீர் இறைப்பது போன்றதாகும். ஒட்டு மொத்த வாழ்வையும் இறையச்சத்திற்கு அப்பாற்பட்டு தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு ரமளானின் நோன்பு இறையச்சத்தை புனரமைத்துக் கொள்ள உதவும் கண்ணியமிக்க கருவியாகும்.

தீங்காண எண்ணங்களும், மனோ இச்சைகளும் மனிதர்களை - அது ஆணாயினும், பெண்ணாயினும் - ஆட்டிப் படைக்கிறது. ஈமானுக்கு ஏற்படும் மிகப் பெரும் நோவினை இதுதான். ஈமானுக்கு நோவினை என்றால் மனிதன் பிற வளங்கள் என்னதான் பெற்றிருந்தாலும் பயனற்ற வாழ்வுக்கு தான் பலியாகி விடுவான்.

நமக்குள் இருந்து கொண்டே நம் வாழ்வை வேரறுக்கும் தீய ஊசலாட்டத்தின் ஆணிவேரை அடையாளம் கண்டு அறுத்தெறியும் ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு.

மகத்தான இரட்சகனின் நேசமும், மறுமையில் நற்பயனும் பெற்றிட வழிகாட்டும் வசந்தமே ரமளான் மாதம்!

கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகிறான்:
'நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது'. (அல்குர்ஆன்: 2:183)

இந்த நோன்பை அல்லாஹ் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டும் கடமையாக்கவில்லை. மாறாக முன் சென்ற சமுதாயத்திற்கும் கடமையாக்கி உள்ளான்.

இந்த வசனத்தில் நாம் இறையச்சம் உடையவர்களாக வேண்டும் என்பதற்காகவே நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான்.

எத்தனையோ ரமளான் மாதங்களை நாம் அடைந்துள்ளோம். அந்த ரமளான் மாதங்களில் நாம் நோன்பு நோற்றுள்ளோம். ஆனால் அல்லாஹ் எதிர்பார்க்கக் கூடிய அந்த இறையச்சம் நம்மிடம் ஏற்பட்டு உள்ளதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம். இறையச்சம் என்பது இறை நம்பிக்கையாளனின் உயிர் நாடியாக இருக்க வேண்டும். அவனுடைய ஒவ்வொரு செயலிலும் எல்லா நேரங்களிலும் இந்த இறையச்சம் வெளிப்பட வேண்டும்.

ஒரு இறை நம்பிக்கையாளன் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றிருக்கும் போது தீமையான பேச்சுக்களைப் பேசாமல், மோசடி செய்யாமல், தீமையான காரியங்களில் ஈடுபடாமல் அந்த மாதம் முழுவதும் இறைவனை அஞ்சி நடக்க வேண்டும் என்று எண்ணி அனைத்துத் தீமைகளை விட்டும் விலகி இருக்கிறான்.

அந்த ரமளான் மாதம் முடிந்து விட்டாலோ அவன் மீண்டும் தீமையான காரியங்களைச் செய்யத் துவங்கி விடுகிறான். ஏனெனில் அந்த நோன்பு அவனிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

இறையச்சம் இந்த ஒரு மாதத்தில் மட்டும் தான் இருக்க வேண்டும் என்றோ, அம்மாதம் முடிந்து விட்டால், என்ன வேண்டுமென்றாலும் செய்துக் கொள்ளலாம் என்றோ இறைவன் கூறவில்லை. இறையச்சம் என்பது ரமளான் மாதத்திற்கும் மற்ற 11 மாதங்களுக்கும் பொதுவானது தான். எனவே எல்லா நாளிலும் ஒருவரிடம் இறையச்சம் பிரதிபலிக்க வேண்டும்.

ரமளான் மாதத்தில் ஒருவன் நோன்பு நோற்றிருக்கும் போது அவனுக்கு அருகில் அவனுடைய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட அவனுக்குப் பிடித்தமான உணவுகள் இருக்கும். அவனுடைய மனைவி இருப்பாள். தான் விரும்பியதை அவன் செய்யலாம். யாரும் கேட்க மாட்டார்கள். எனினும், நாம் இறைவனுக்காக நோன்பு நோற்றுள்ளோம். எனவே, நமக்குத் தடுக்கப்படாத பொருளாக இருந்தாலும் இப்போது நமக்குத் தடுக்கப் பட்டுள்ளது என்று விளங்கி தவிர்ந்து இருக்கின்றான்.

மேலும், ரமளான் மாதத்தில் நம்மால் முடிந்த அளவு ஏதேனும் உணவைத் தயாரித்து ஏழை, எளியவருக்குக் கொடுப்போம். ஆனால் ரமளான் முடிந்து விட்டாலோ நம் அண்டை வீட்டார் உண்ண உணவில்லாமல் பசியோடு இருக்கிறார்கள் என்பதை அறிந்தால் கூட அவர்களுக்கு உணவளிக்க நமக்கு மனம் வருவதில்லையே! ஏன்? என்று நமக்கு நாமே கேட்டு ரமளான் அல்லாத நாட்களிலும் உணவளிக்க வேண்டும் என்ற இறையச்சம் வருவதற்காக தான் இந்த நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்று இறைவன் கூறுகிறான்.

இறைவன் ஹலாலாக்கிய நம்முடைய பொருளாக இருந்தாலும் அதை இறைவன் தடுத்து விட்டான் என்பதால் அவனுக்கு அஞ்சி நாம் தவிர்ந்து இருக்கிறோம். அப்படி என்றால் அடுத்தவருடைய பொருள் நமக்கு ஒரு போதும் ஹலால் ஆகாது. எனவே, நாம் யாரையும் ஏமாற்றக் கூடாது. யாருக்கும் மோசடி செய்யக் கூடாது என்ற இறையச்சம் நம்மிடம் வர வேண்டும். இந்த இறையச்சம் வருவதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்று இறைவன் கூறுகிறான்.நோன்பின் மூலம் இவ்வுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு அல்லாஹ்விடம் என்ன கிடைக்கும்? வேறு எந்த நல்லறத்துக்காகவும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிpடமிருந்து நமக்குக் கிடைக்கும் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

'ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை பரிசு வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே, அதற்கு நானே பரிசளிப்பேன்' என்று அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி

மற்ற எந்த வணக்கத்தையும் விட நோன்பு அதிகமான பரிசுகளைப் பெற்றுதரும்; என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.

'நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியை விடச் சிறந்ததாகும்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்(அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி)

'நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு திறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்'; என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல் : புகாரி

படைப்பினங்கள் பசி பொறுக்காதது. உணவின் தேவை அவைகளுக்கு அத்தியாவசியமாகும். படைத்த இறைவனுக்காக பசியையும், உணர்வுகளையும் அடக்கி அவன் குறித்த நேரத்தில் நோன்பு திறக்க உணவு உண்ணும்போது ஏற்படும் மகிழ்ச்சி ஒன்று!

மறைபொருளாக இருக்கும் இறைவன் உணர்த்திய வாழ்வினை அவனை காணாமலேயே பூமியில் வாழ்ந்து நிலையான மறுமை நாளில் எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் அந்த மகத்தான இறைவனை சந்திக்கும் தலையான சம்பவம் ஏற்படுத்தும் மகிழ்ச்சி இருக்கிறதே !! அல்லாஹூ அக்பர்! மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களுக்காக இதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?

'யார் ரமளான் மாதத்தில் நம்பிக்கையுடனும் மறுமைப் பயனை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்'; என்ற நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல் : புகாரி

பாவம் செய்யாதவர்கள் யாரும் கிடையாது. அனைத்து பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைப்பதென்பது சாதாரண விஷயமல்ல. சின்ன அமல் மூலம் இவ்வளவு பெரிய பாக்கியங்கள் கிடைப்பதால் நோன்பு நோற்பதில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டும் நமது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள வல்ல அல்லாஹ் நம் அனைருக்கும் அருள் புரிவானாக!

நாகூரில் கிரகண தொழுகை
ஜூன்15, புதன் இரவு11.55 மணிக்கு நாகூரில் சந்திரன் கிரகணம் தென்பட்டதால் 12.15 முதல் 1.20 மணி வரை கிரகணம் தொழுகை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸில் நடைபெற்றது, தொழுகைக்கு பின் மர்கஸ் இமாம் மவ்லவி முஹம்மத் அலி அவர்கள் பயான் நிகழ்த்தினார்கள்.
குறிப்பு: நாகூரில் கிரகண தொழுகை TNTJ மர்கஸில் மட்டும் தான் நடைபெற்றது.



நாகையில் ரூபாய் 7810 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகப்பட்டிணம் மற்றும் நாகூர் கிளை சார்பாக கடந்த 7-1-11 அன்று ஏழை சகோதரரின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 7810 வழங்கப்பட்டது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களுடைய படைப்புகளை இணைதளத்திள் பதிவு செய்ய nagaisouthtntnet@gmail.com இந்த முகவரிக்கு அனுப்பவும்.