அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) NAGAI(DT) தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளத்திற்கு வருகை தரும் தாங்கள் அனைவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக! அன்பிற்கினிய சகோதர,சகோதரிகளே நீங்கள் வருகை தந்த NAGAI(DT) தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த இணையதளமானது அல்லாஹ்வின் மாபெரும் கருனையினால் அனைவர்களுக்கும் இஸ்லாத்தின் தூயகொள்கைகளையும், சகோதர வாஞ்சைகளையும் வலிமையோடு எடுத்தியம்பும் ஒரு மாபெரும் வழியாக இதை நாம் கருதி, மிக குறுகிய காலத்தில் வடிவமைத்து இருக்கின்றோம். இதில் அவ்வப்போது ஜமாஅத் மூலமாக நடந்த நிகழ்வுகளை தந்து வருகிறோம். இதை இன்னும் பல பயனுள்ள வகையில் செய்திகளை தந்து, நமதூர் மக்கள் அனைவர்களும் தூய்மையான மார்க்க நெறி முறைகளை அறிந்து அதன் மூலமாக பலரிடமும் மட்டியிட்டுக்கிடக்கும் மூட பலவழக்கங்களும், சடங்கு, சம்பிரதாயங்களும் இன்னும் என்னென்ன இஸ்லாம் கூறாத செயல் எல்லாம் குடி கொண்டு நம்முடைய ஈமானை சல்லடையாக அரித்தெடுத்துக் கொண்டுள்ளதோ அவைகளை எல்லாம் இன்ஷா அல்லாஹ் வேரோடும், வேரடி மண்டோடும் பரித்தெடுத்து நம் சமுதாய மக்களை சொர்க்கத்திற்கு உரியவர்களாக உரு மாற்ற வேண்டும் என்பதே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுதி மிக்க நோக்கம். NAGAI(DT) தவ்ஹீத் ஜமாஅத்தின் நோக்கமும் அதுவே!.. குறிப்பாக நமதூர் மக்களுக்கு இஸ்லாத்தின் தூய்மையான செய்திகளை கொண்டுச்சேர்ப்பதினால் இதுவரை வந்த,இனி வருகின்ற,இன்னும் வர இருக்கின்ற அணைத்து விதமான இடற்பாடுகளையும்,தொல்லைகளையும், அல்லாஹ்விற்காக அணைத்தையும் பொறுத்து எங்களுடைய தவ்ஹீத் பணி சிறக்க வல்ல அல்லாஹு ரப்பில் ஆலமீன் அருள் புரிவானாக! தாங்களும் அல்லாஹ்விடம் துஆச்செய்வதோடு வெகு விரைவாக NAGAI(DT) தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த இணையதளத்தின் மார்க்க விளக்கம் அறியும் செய்திகளை விரிவாக்கம் செய்கின்ற பணி நடந்து வருகிறது இன்ஷா அல்லாஹ் விரைவில் இப்பணி நிறைவடைந்து அதிகதிகமான இஸ்லாம் பற்றிய அணைத்து செய்திகளும் மற்றும், சமுதாய செய்திகள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செய்திகள், ஊர் செய்திகள், முழு தமிழ் நாட்டின் செய்திகள், நமது நாட்டின் செய்திகள், உலக செய்திகள், இன்னும் பல தகவலோடு NAGAI(DT)தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளம் வர இருப்பதை மகிழ்ச்சியோடு கூறிக்கொண்டு ”நன்மையை ஏவி, தீமையை தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்கவேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.(அல் குர்ஆன் 3:104) என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறு வதை நாம் ஒவ்வொருவர்களும் தமது வாழ்வில் கடைப்பிடித்து வெற்றிபெற தத்தமது காலத்தை கனியவைப்போமாக! இன்ஷா அல்லாஹ் விரைவில் பற்பல தகவலோடு NAGAI(DT) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளம் வரயிருப்பதை கூறிக்கொண்டு விடைப்பெறுகிறோம். அன்புடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - NAGAI(DT)

சனி, 4 ஜூன், 2011

குர்ஆன் கூறும் கருவியல்: -

ஆண் அல்லது பெண் குழந்தை - ஆணின் உயிரணுவே காரணம்


குர்ஆன் கூறும் கருவியல்: -

தொடர்-1 ஆண் அல்லது பெண் குழந்தை - ஆணின் உயிரணுவே காரணம்

"இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் - (கர்ப்பக் கோளறையில்) செலுத்தப் படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு" (அல் குர்ஆன் 53:45-46)

(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? (அல் குர்ஆன் 75:37)

ஒரு பெண், கருத்தரிக்கும் போது அது ஆண் குழந்தையாகவோ அல்லது பெண் குழந்தையாகவோ ஆகுவதற்கு அவளுடைய கனவனின் உயிரணுவே காரணம்: மனைவி காரணமல்ல. என்ற தற்கால அறிவியல் ஆராய்ச்சியின் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே திருமறை வசனம் கூறியிருப்பது குர்ஆன் கூறும் அறிவியல் அற்புதங்களில் ஒன்றாகும். இது பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

பொதுவாக பெண்ணின் சினை முட்டையில் X என்ற குரோமோசோம் மட்டுமே இருக்கும், ஆணின் விந்தணுவில் X அல்லது Y என்ற குரோமோசோம் இருக்கும் என்பதையும் X என்பது பெண்ணை உருவாக்கும் குரோமோசோம் என்றும் Y என்பது ஆணை உருவாக்கும் குரோமோசோம் என்றும் நாம் படித்திருக்கிறோம்.

இப்போது மேற்கண்ட குர்ஆன் ஆயத்துக்கள் இன்றைய அறிவியலுடன் எவ்வாறு ஒத்துப் போகின்றது என்பதைச் சற்று விளக்கமாகப் பாப்போம்.

X குரோமோசோம் உடைய பெண்ணின் சினை முட்டையுடன் X குரோமோசோம் உடைய ஆணின் விந்தணு சேர்ந்தால் அது X-X என்ற ஜோடியைக் கொண்ட செல் உருவாகி அதன் முலம் பெண் குழந்தையாக உருவாகின்றது. (X-X என்ற குரோமோசோம் ஜோடியைக் கொண்ட செல் பெண் குழந்தையை உருவாக்கும் தன்மையைக் கொண்டது)

X குரோமோசோம் உடைய பெண்ணின் சினை முட்டையுடன் Y குரோமோசோம் உடைய ஆணின் விந்தணு சேர்ந்தால் அது X-Y என்ற ஜோடியைக் கொண்ட செல் உருவாகி அதன் முலம் ஆண் குழந்தையாக உருவாகின்றது. (X-Y என்ற குரோமோசோம் ஜோடியைக் கொண்ட செல் ஆண் குழந்தையை உருவாக்கும் தன்மையைக் கொண்டது)

பெண்ணின் சினை முட்டை வெறும் X குரோமோசோமை மட்டுமே உடையதாக இருக்கிறது. ஆனால் பெண்ணின் கர்ப்பப் பையினுள் செலுத்தப்படும் விந்தணுக்களில் X குரோமோசோம்களைக் கொண்ட உயிரணுக்களும் Y குரோமோசோம்களைக் கொண்ட உயிரணுக்களும் கோடிக்கணக்கில் உள்ளன. ஆனால் ஆணின் ஒரே ஒரு உயிரணு மட்டுமே பெண்ணின் சினை முட்டையுடன் சேர்ந்து கருவாக வளர்கின்றது. பெண்ணின் சினை முட்டையுடன் சேரக் கூடிய ஆணின் உயிரணு X குரோமோசோம் உடையதாக இருந்தால் அது பெண் குழந்தையாகவும், பெண்ணின் சினை முட்டையுடன் சேரக் கூடிய ஆணின் உயிரணு Y குரோமோசோம் உடையதாக இருந்தால் அது ஆண் குழந்தையாகவும் உருவாகிறது.

பெண்ணின் சினை முட்டை X ஆக மட்டுமே இருக்கிறது. கர்ப்பக் கோளறையில் செலுத்தப் படும் ஆணின் உயிரணுக்கள் தாம் X ஆகவோ அல்லது Y ஆகவோ இருக்கிறது. அதாவது கர்ப்பக் கோளறையில் செலுத்தப் படும் ஆணின் உயிரணுக்களுக்களே சினை முட்டையுடன் சோந்து பெண் குழந்தையாகவோ அல்லது ஆண் குழந்தையாகவோ உருவாகின்றது.

இதை இப்படியும் புந்துக் கொள்ளலாம்.

- பெண்ணின் சினை முட்டையுடன் - கர்ப்பக் கோளறையில் செலுத்தப் படும் ஆணின் X குரோமோசோம் உடைய உயிரணு சேர்ந்தால் பெண் குழந்தையாக உருவாகிறது.
- பெண்ணின் சினை முட்டையுடன் - கர்ப்பக் கோளறையில் செலுத்தப் படும் ஆணின் Y குரோமோசோம் உடைய உயிரணு சேர்ந்தால் ஆண் குழந்தையாக உருவாகிறது.

மேற்கண்ட விளக்கங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் கர்ப்பக் கோளறையில் செலுத்தப்படும் ஆணின் இந்தியத் துளியே பெண் குழந்தையாகவோ அல்லது ஆண் குழந்தையாகவோ உருவாகுவதற்கு காரணமாக அமைகின்றது, பெண்ணின் சினை முட்டையல்ல. இன்னும் சற்று விளக்கமாக கூறுவதென்றால் ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை என்ற ஜோடிகளை உருவாக்குவது பெண்ணின் கர்ப்பக் கோளறையில் செலுத்தப் படும் போதுள்ள இந்தியத் துளியைக் கொண்டே என்பது நன்கு புலப்படுகின்றது.

இப்போது மேற்கண்ட வசனங்களை ஒருமுறை படித்துப் பாருங்கள்.

"இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் - (கர்ப்பக் கோளறையில்) செலுத்தப்படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு" (அல் குர்ஆன் 53:45-46)

(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? (அல் குர்ஆன் 75:37)

20 ம் நூற்றாண்டின் இந்த அரிய கண்டுபிடிப்பை 7 ம் நூற்றாண்டிலேயே கூறிய அல்லாஹ்வின் திருமறையின் அறிவியல் அற்புதங்களை உலகிற்கு எடுத்துக்கூறுவது நமது கடமையன்றோ?

இன்றும் நம்மில் சிலர் தம் மனைவி பெண் குழந்தைகளை மட்டுமே பெற்றெடுக்கிறாள், ஆண் குழந்தையே பெற்றெடுப்பதில்லை என்று குறை கூறுகிறாகள். குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ ஆகுவதற்கு தம்முடைய உயிரணுவே காரணம் என்பதை அறியாததே இதற்குக் காரணம். இவர்கள் பின் வரும் இறைவசனங்களைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளாகள்.

அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான். அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் - நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன். (அல்குர்ஆன் 42:49-50)   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களுடைய படைப்புகளை இணைதளத்திள் பதிவு செய்ய nagaisouthtntnet@gmail.com இந்த முகவரிக்கு அனுப்பவும்.